பிரியங்காவின் அரசியல் வருகை காங்கிரசுக்கு நல்ல பலனை தருகின்றது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் .
இதையடுத்து பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸ் கட்சிக்கு புதிய உற்சாகத்தை கொடுக்குமென்று அரசியல் கட்சியினர் தங்களது கருத்தை கூறி வந்தனர். இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் கூட்டணி ஆட்சியமைத்துள்ள சிவசேனா கட்சி பிரியங்கா_வின் அரசியல் வரவால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் பலன் அடையும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், இது அரசியலில் ராகுல் காந்தி எடுத்த நல்ல முடிவு என்று பாராட்டி , இந்திரா காந்தி குடும்பத்துடன் நம்நாடு நல்ல உறவு வைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். சிவசேனாவின் இந்த கருத்து பாஜகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…