பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் ! உச்சநீதிமன்றத்தில் மனு 

Default Image

ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.திடீரென்று அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்ட நிலையில்  காங்கிரஸ்,தேசிய வாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா பாஜக அரசை விமர்சனம் செய்து வருகின்றது.
இந்த நிலையில்  மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில்  மனு  தாக்கல் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்