உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் சிவசேனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா உ.பி.யில் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கபோவது பற்றி சிவசேனா இதுவரை கூறவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தனது கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு சிவசேனா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நேற்று முன்தினம் லக்னோவில் சிவசேனாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், உ.பி.யின் அனைத்து சட்டமன்ற இடங்களிலும் தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாஜக அரசாங்கத்தின் கீழ் முற்றிலும் தோல்வியடைந்தது. மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டினர்.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம். 2017 தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பாஜக வென்றது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. சமாஜ்வாதி கட்சி 47 வெற்றி பெற்றது, காங்கிரஸ் 7 இடங்களுக்கு வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 19 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா இரண்டு நாட்கள் மாநில தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டத்தில், மண்டல வாரியாக தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்கள் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…