உ.பி.யில் 403 தொகுதிகளிலும் களமிறங்கும் சிவசேனா..!

Default Image

உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 403 தொகுதிகளிலும் சிவசேனா தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா உ.பி.யில் உள்ள 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் எந்த அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கபோவது  பற்றி சிவசேனா இதுவரை கூறவில்லை. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தனது கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு சிவசேனா தயாராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நேற்று முன்தினம் லக்னோவில் சிவசேனாவின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், உ.பி.யின் அனைத்து சட்டமன்ற இடங்களிலும் தேர்தலில் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை பாஜக அரசாங்கத்தின் கீழ் முற்றிலும் தோல்வியடைந்தது. மாநிலத்தில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டினர்.

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறலாம். 2017 தேர்தலில், 403 இடங்களில் 312 இடங்களை பாஜக வென்றது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. சமாஜ்வாதி கட்சி 47 வெற்றி பெற்றது, காங்கிரஸ் 7 இடங்களுக்கு வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 19 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா இரண்டு நாட்கள் மாநில தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த கூட்டத்தில், மண்டல வாரியாக தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் திட்டங்கள் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்