பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்.,28 முதல் நவ.,3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவசேனா கட்சி அறிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மகராஷ்ரா முதலவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும், சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஆதித்ய தாக்கரே என 22 பேர் ஈடுபடுவர்கள் என அக்கட்சி தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என்று அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அனில் தேசாய் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தகவல் தெரிவித்த அவர் பீகார் தேர்தலில் நாங்கள் எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்கபோவதில்லை. மேலும் 50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிட உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டார்களோ அங்கே தான் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
பீகாரில் களமிரங்கும் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது உள்ளது. எனவே அக்கட்சியினர் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் எக்காளம் இசைக்கருவியை மனிதன் ஊதுவது போல் உள்ள சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…