பீகாரில் 50 இடங்களை குறிவைத்து குதிக்கும் சிவசேனா- சட்டசபை..2020 பராக்!

Default Image

பீகார் சட்டசபை தேர்தலில் சிவசேனா சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அனில் தேசாய் எம்.பி. கூறியுள்ளார்.

 

 பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்.,28 முதல் நவ.,3, 7 ஆகிய தேதிகளில் நடைபெறகிறது.243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

 

இத்தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவசேனா கட்சி  அறிவித்தது.மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் மகராஷ்ரா முதலவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகனும், சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ஆதித்ய தாக்கரே என 22 பேர் ஈடுபடுவர்கள்  என அக்கட்சி தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில்  50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என்று அக்கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அனில் தேசாய் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தகவல் தெரிவித்த அவர் பீகார் தேர்தலில் நாங்கள் எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்கபோவதில்லை. மேலும் 50 தொகுதிகளில் சிவசேனா போட்டியிட உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எங்கள் கட்சியை சேர்ந்தவர் சமூகநலப் பணிகளில் ஈடுபட்டார்களோ அங்கே தான் வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

பீகாரில் களமிரங்கும் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தில்  போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது உள்ளது. எனவே அக்கட்சியினர் அங்கு நடைபெற உள்ள தேர்தலில் எக்காளம் இசைக்கருவியை மனிதன் ஊதுவது போல் உள்ள சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்