ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
25 ஆண்டுகால பாஜக கூட்டணியை கடந்த 2019ஆம் ஆண்டு சிவசேனா கட்சி முறித்தது. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்வரானார். அதன் பிறகு அந்த கூட்டணி பிடிக்காமல், சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தனியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மையை நிரூபித்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே : சிவசேனா கட்சி இரண்டாக பிரித்து இரு பிரிவுகளாக இருந்ததால் அக்கட்சி சின்னம் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அண்மையில் தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கட்சியும், கட்சி சின்னமும் ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சிவசேனா கட்சி அலுவலகங்கள் : இதற்கிடையில், கட்சி சின்னமும் , கட்சியும் கிடைத்ததால், அதனை அடுத்து, ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகத்தை கைப்பற்றினர். அதே வேளையில், உத்தவ் தாக்கரே தனது ஆதரவாளர்களுடன் சிவசேனா தலைமை கட்சி அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார். இதனால் தற்போது மஹாராஷ்டிரா அரசியலில் மிகவும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தர்மயுத்தம் : மேற்கண்ட நிகழ்வுகள் தமிழக அரசியலில் அதிமுக கட்சிக்கும் நிகழ்ந்து வருவதும் குறிப்பிட தக்கது. ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தக்கரே போல இபிஎஸ் – ஓபிஎஸ் என பிரிந்து ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியது குறிப்பிடதக்கது.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…