சிவசேனா சின்னம் வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு
உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.
சிவசேனா சின்னம் முடக்கட்டப்பட்டதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. சிவசேனா சின்னம் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மராட்டிய முதலமைச்சர் ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியும் சின்னத்துக்கு உரிமை கோரின. இரு அணிகளும் உரிமை கோரியதால் கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்த நிலையில், சிவசேனா சின்னம் முடக்கட்டப்பட்டதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.