மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் – சஞ்சய் ராவத்

Published by
Venu

மகாராஷ்டிராவில் 5 ஆண்டுகளும் சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வர் என்று  சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அதற்கு காரணம் அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்த அங்கு மீதமுள்ள கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து குழப்பமே நிலவி வருகிறது.
இந்த நிலையில் இன்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்  கூறுகையில் ,சிவசேனாவை சேர்ந்தவரே மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு முதலமைச்சராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். 
 

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

4 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

5 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

5 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

6 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

7 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

7 hours ago