நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன் – சிவசேனா தலைவர் அறிவிப்பு
நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வகையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இது குறித்து கூறுகையில்,நவம்பர் 24-ஆம் தேதி அயோத்தி செல்கிறேன். அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. ராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா கட்சி தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது என்று தெரிவித்துள்ளர்.