ராவணனை எரிக்க களமிறங்கும் முதல் பெண்! நடிகை கங்கனாவுக்கு கிடைத்த பெருமை…
டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் தசரா விழாவில் நடிகை கங்கனா, ராவணன் உருவ பொம்மையை எரிக்க உள்ளார்.
டெல்லி: செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா நிகழ்வின் 50 ஆண்டுகால வரலாற்றில், ஒரு பெண் அம்பு எய்து ராவணன் உருவ பொம்மையை எரிப்பது இதுவே முதல் முறை என்று லாவ் குஷ் ராம்லீலா கமிட்டியின் தலைவர் அர்ஜுன் சிங் தெரிவித்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அர்ஜுன் சிங் கூறினார். அர்ஜுன் சிங் மேலும் இது குறித்து பேசுகையில், ஒரு திரைப்பட நடிகராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு விஐபி கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை தொடர்ந்து, சினிமா நட்சத்திரங்களில், அஜய் தேவ்கன் மற்றும் ஜான் ஆபிரகாம் கடந்து ஆண்டு பிரபாஸ் வரை அம்பு எய்து ராவணன் உருவ பொம்மையை எரித்துள்ளனர். 50 ஆண்டுகளில் முதன்முறையாக, பெண் ஒருவர் இன்று இந்த நிகழ்வை நிகழ்த்துகிறார் என்றார்.
செம் ஆரம்பமே அமர்க்களம்!! அட்டகாசமான BGM-உடன் ‘தளபதி 68’ பூஜை வீடியோ வெளியீடு!
நடிகை கங்கனா நேற்று இது குறித்து பேசிய வீடியோவையும் வெளியிட்டார். அதில், “50 ஆண்டுகால வரலாற்றில் செங்கோட்டையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில், ஜெய் ஸ்ரீராம் என்ற ராவணனின் உருவ பொம்மையை ஒரு பெண் தீ வைப்பது இதுவே முதல் முறை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram