காங்கிரஸ் கட்சியில் உள்ள இந்துக்கள் அயோத்தி செல்ல உரிமை உள்ளது.! ஆனால்.? சசிதரூர் கருத்து.!

Congress MP Shashi Tharoor - Ram Temple Ayodhya

உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா (Pran Pratishtha) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேறக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.!

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அரசியல் நோக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது என பல்வேறு காரணங்களை கூறி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ராமர் கோயில் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து விட்டனர். சில கட்சியினர் தொண்டர்கள் விருப்பப்பட்டால் ராமர் கோயில் விழாவுக்கு செல்லலாம் என கூறி வருகின்றனர்.

ராமர் கோவில் திறப்பு அழைப்பை நிராகரித்த காங்கிரஸ் கட்சி தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் தனியார் செய்தி நிறுவனத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எங்கள் கட்சியில் (காங்கிரஸ்) பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். அந்த நம்பிக்கையை கடைப்பிடிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

ராமர் கோயில் விழாவுக்கு செல்ல கட்சியில் உள்ள இந்துக்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் அயோத்தியில் தற்போது கோவில் பணிகள் முடிவடையாததால், முழுமையடையாத கோவிலுக்கு அரசியல் காரணமாக மட்டுமே நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கட்சி தலைமை கருதுகிறது. இந்த விழா பாஜகவின் அரசியல் நலன்களுக்காக நடத்தப்படுவதாக தெரிகிறது. எனவே, நாங்கள் பங்கேற்றால், அது ஒரு அரசியல் நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கும். பொதுமக்களும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். என்று சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் கோவில் முழுமையாக கட்டப்படட்டும். அப்போது நான் அங்கு செல்வேன். காசி விஸ்வநாதரையும் தரிசிப்பேன். அப்போது பிரார்த்தனை செய்ய நான் அங்கு செல்வதில் தவறில்லை என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை இந்துக்கள் கொண்டாடுவதில் தவறில்லை. இருப்பினும், அந்த இடத்தில் நாங்கள் இருப்பது வேறு செய்தியை கொடுத்துவிடும் என்பதால், காங்கிரஸ் கட்சி பங்கேற்க வேண்டாம் என்று கட்சி தலைமை முடிவு செய்திருக்கிறது என்று சசி தரூர் தனியார் செய்தி நிறுவன பேட்டியில் கூறியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth