பிரதமர் நிவாரண நிதி திட்டத்திற்கு ஷாருக்கான் ரசிகர்கள் சார்பாக நிதியுதவி.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் பிரதமர் நிவாரண திட்டத்திற்கு தங்களால் முடிந்த நிதியுதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து, பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ரசிகர்கள் சார்பாக பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. இதனை ஷாருக்கான் ரசிகர்கள் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.