தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சரத் பவார் கோரிக்கை..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு குழுவாக பிளவு ஏற்பட்டதால் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது.
இதற்கிடையில் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார், சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கடந்த 6-ஆம் தேதி அஜித் பவர் தலைமையில் உள்ள அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான “கடிகாரம்” சின்னத்தையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
நாளை மறுநாள் மீண்டும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை..!
இதைத்தொடர்ந்து, சரத் பவார் தலைமையிலான அணி “தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார்” என பெயர் சூட்டினர். இந்த புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. கடந்த 13-ம் தேதி சரத் பவார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அஜித் பவார் அணியை ‘உண்மையான’ தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) என்று அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளார்.