அஜித் பவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை குழுத் தலைவர் – சரத் பவார்
அஜித் பவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார் பதவி ஏற்றார்.யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அஜித் பவருக்கு பதிலாக புதிய சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்தார்.மேலும் அஜித்பவார் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் . கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக அஜித்பவார் நடந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.