சரத் பவார் தான் எங்கள் தலைவர் – துணை முதலமைச்சர் அஜித் பவார் அதிரடி ட்விட் ..!
மஹாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்தது. மஹாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமையும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று காலை பாஜகவின் பட்னாவிஸ் முதலமைச்சராகவும் , துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த அஜித் பவார் மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவி ஏற்று கொண்டனர்.
இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மும்பையில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைப்பட்டு உள்ளனர்.
I am in the NCP and shall always be in the NCP and @PawarSpeaks Saheb is our leader.
Our BJP-NCP alliance shall provide a stable Government in Maharashtra for the next five years which will work sincerely for the welfare of the State and its people.— Ajit Pawar (@AjitPawarSpeaks) November 24, 2019
இந்நிலையில் துணை முதலமைச்சராக பதவியேற்று உள்ள அஜித் பவார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார்.அதில் ,நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் உள்ளேன்.எப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருப்பேன்.எங்கள் கட்சியின் தலைவர் சரத் பவார்.பாஜக , தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் தான் மஹாராஷ்டிராவில் நிலையான ஆட்சி வழங்க முடியும்.இந்த கூட்டணிதான் மக்கள் நலனுக்காக பாடுபடும் என கூறியுள்ளார்.