தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சரத் பவார் உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை சரத் பவார் நீக்கினார். பின்னர் அதிக எம்.எல்.ஏ.க்களை ஆதரவு கொண்ட அஜித் பவார் பாஜக ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவளித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்று கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த 53 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அஜித் பவார் பிளவுக்கு பிறகு சரத் பவாருக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக அஜித் பவார் மற்றும் சரத் பவார் அணிக்கு இடையே ஏற்பட்ட மோதலை தேர்தல் ஆணையம் தீர்த்து வைத்தது. அதன்படி அஜித் பவர் தலைமையில் இயங்கும் அணிக்குதான் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் கடிகாரம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கியது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி..!
இதைத்தொடர்ந்து, சரத் பவார் தலைமையிலான அணி “தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத்சந்திர பவார்” என பெயர் சூட்டினர். இந்த புதிய பெயருக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் சின்னத்தை அஜித் பவாரின் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியதை எதிர்த்து சரத்பவார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது.