பெங்களூருவில் எதிர்கட்சிக்கூட்டத்தில் சரத்பவார், கலந்து கொள்ளவில்லை- தேசியவாத காங்கிரஸ் அறிவிப்பு.!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நாளை பங்கேற்பார் என தகவல்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் முனைப்பில், காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் இன்று மற்றும் நாளை பெங்களுருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில் நடைபெறுகிறது. இதில் 24 எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.
NCP spokesperson Mahesh Tapase tweets, “Sharad Pawar and Supriya Sule will participate in the Opposition meeting tomorrow, 18th July…” pic.twitter.com/TmbCxehQly
— ANI (@ANI) July 17, 2023
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், இந்த கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியானதை அடுத்து அக்கட்சி அதனை மறுத்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் நாளை சரத்பவார் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தனது மகள் சுப்ரியா சுலேவுடன், சரத்பவார் கலந்து கொள்வார் என என்சிபி செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில எம்.எல்.ஏக்களுடன் அஜித் பவார் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாக மகாராஷ்டிர அரசியலில் பெரிதும் பேசுபொருளாக ஆனது. இதனால் சரத்பவார் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக வெளிவந்த தகவலை மறுத்து நாளை சரத்பவார் கூட்டத்தில் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளது.