தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.இந்த வகையில் தான் நேற்று பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.துணை முதமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பொறுப்பேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைத்தது சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற குழுத்தலைவர் பொறுப்பில் இருந்து அஜித் பவாரை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மும்பையில் தனியார் ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியின் தலைவர் சரத் பவார் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தேசியவாத காங்கிரஸ் தலைவர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…