அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி நடைபெறும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழாவில் நான்கு சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா சனாதன தர்மத்தை மீறி நடப்பதால், ஜனவரி 22ம் தேதி மிக முக்கியமான இந்து மத குருக்களான சங்கராச்சாரியார்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, இந்து மதத்தின் நெறிமுறைகளை பின்பற்றுவது எங்கள் கடமை. இதனால் எங்கள் தர்ம சாஸ்திரத்திற்கு எதிராகவும் செல்ல முடியாது. கோவிலை கட்டி முடிக்காமல் ராமர் சிலைகளை நிறுவுவது இந்து மதத்திற்கு எதிரானது. ராமர் கோயிலை திறக்க அவ்வளவு அவசரம் தேவையில்லை. ராமர் கோயில் கட்டுவதற்கு போதுமான கால அவகாசம் உள்ளது, அதன் பிறகு தான் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
ராமர் கோயில் திறப்பு விழா… எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பு!
நிஷ்சலானந்தர், ஸ்கந்த புராணத்தின் படி, சடங்குகள் முறையாகச் செய்யப்படவில்லை என்றால், கெட்ட சகுனம் ஒரு சிலைக்குள் நுழையக்கூடும் என்றும் கோயில் அறக்கட்டளையின்படி, ராமர் கோயிலின் முதல் தளம் மற்றும் கருவறை தயாராக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் கோவில் முழுமையாக கட்டப்படும் என தெரிவித்தார். இந்த வார தொடக்கத்தில், பூரி கோவர்தன்பீடத்தின் சங்கராச்சாரியார், சுவாமி நிஷ்சலானந்த சரஸ்வதி, இது வேதத்திற்கு எதிரானது என்பதால், இந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்தனர்.
இதனிடையே, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில், பிரபலங்கள், துறவிகள், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் ஆக்கியுள்ளார்கள் என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…