நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் மறுப்பு
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய கிடைக்க அங்கு நடத்திய சோதனையில் 8 பேரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
8 பேரில் ஒருவர் தான் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். 20 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின் ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பொதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆர்யன் கானிடம் 4 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்றுடன் 4 நாள் காவல் முடிந்ததும் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து, வரும் 21 ஆம் தேதி வரை 8 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் ஜாமின் கோரி ஆர்யன் கான் மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க மறுப்புத் தெரிவித்து மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…