நிழலில்லாத நாள் இன்று! மதியம் 12:07-க்கு நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு!

Published by
லீனா

இன்று நிழலில்லாத நாள். இன்று மதியம் 12:07 மணியளவில் நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு.

மதிய நேரங்களில் நாம் வெளியில் சென்றாலே, நம்மை நமது நிழலும் பின் தொடர்ந்து வருவதுண்டு. இந்நிலையில், சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளமானது  பூஜ்யமாகிவிடும். அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்குமேல் நாள்தோறும் வருவதில்லை.

சூரியன் செங்குத்தாக தலைக்குமேல் நேராக வரும் நிகழ்வு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே  நடக்கும். அவ்வாறு சூரியன் வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளினுடைய நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்யமாகிறது. வானிலை ஆய்வாளர்கள், அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று குறிப்பிடுகின்றனர்.

பகலும் இரவும் சமமாக வரும் நாள் என்பதால் இந்த நிகழ்வு கடந்த ஆண்டும் இதே நாளில் ஏற்பட்டது. இந்த அரிய நிகழ்வை கடந்த ஆண்டு மக்கள் அனைவரும் பிர்லா கோளரங்கில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்தந்த இடத்தின்  தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும் என்று கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

7 minutes ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

30 minutes ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

8 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

9 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

11 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

12 hours ago