நிழலில்லாத நாள் இன்று! மதியம் 12:07-க்கு நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு!
இன்று நிழலில்லாத நாள். இன்று மதியம் 12:07 மணியளவில் நிகழவிருக்கும் அதிசய நிகழ்வு.
மதிய நேரங்களில் நாம் வெளியில் சென்றாலே, நம்மை நமது நிழலும் பின் தொடர்ந்து வருவதுண்டு. இந்நிலையில், சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது நிழலின் நீளமானது பூஜ்யமாகிவிடும். அதாவது நிழல் காலுக்கு கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்குமேல் நாள்தோறும் வருவதில்லை.
சூரியன் செங்குத்தாக தலைக்குமேல் நேராக வரும் நிகழ்வு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே நடக்கும். அவ்வாறு சூரியன் வரும்போது ஓர் இடத்தில் உள்ள ஒரு பொருளினுடைய நிழலின் நீளம் ஆண்டுக்கு இருமுறை பூஜ்யமாகிறது. வானிலை ஆய்வாளர்கள், அந்த நாளையே நிழல் இல்லாத நாள் என்று குறிப்பிடுகின்றனர்.
பகலும் இரவும் சமமாக வரும் நாள் என்பதால் இந்த நிகழ்வு கடந்த ஆண்டும் இதே நாளில் ஏற்பட்டது. இந்த அரிய நிகழ்வை கடந்த ஆண்டு மக்கள் அனைவரும் பிர்லா கோளரங்கில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு காரணமாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குறிப்பாக இந்த அதிசய நிகழ்வானது அனைத்து இடங்களும் ஒரே நாளில் நிகழ்வதில்லை. அந்தந்த இடத்தின் தீர்க்க ரேகைக்கு ஏற்ப வெவ்வேறு நாட்களில் நிகழும் என்று கூறப்படுகிறது.