உத்திரபிரதேசத்தில் பட்டியலினப்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை உத்திரபிரதேச மாநிலம், பாலராம்பூர் மாவட்டடத்தை சேர்ந்த 22 வயது பட்டியலின பெண் ஒருவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் இரவு, கையில் குளுக்கோஸ் ஊசியுடன் வீடு திரும்பியுள்ளார்.
அப்பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததையடுத்து, அவரது பெற்றோர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், அவர் இரண்டு நபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில், போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…