புகாரளிக்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – பிரியங்கா காந்தி ட்வீட்
காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா? என பிரியங்கா காந்தி ட்வீட்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து பிரியங்காகாந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ’13 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டதை புகார் அளித்த பிறகு SHO வால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது, நேர்மையாய் இருக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு புல்டோசர்சரால் நசுக்கப்படுகிறது என்பது தெரிகிறது. காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்றால் அவர்கள் புகார் அளிக்க எங்கே போவார்கள்.? காவல் நிலையங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாய் இருப்பதை உபி அரசு உறுதி செய்வதை பற்றி எப்பொழுதாவது சிந்தித்து இருக்கிறதா?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பிற்காக நிறைய அம்சங்களை அறிவித்து இருந்தோம். இது போன்ற நிகழ்வுகள் திரும்பவும் நடக்காமல் இருக்கவும் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
…ऐसी घटनाओं को रोकने के लिए महिला सुरक्षा और महिला हितैषी कानून व्यवस्था के लिए गंभीर कदम उठाने ही होंगे। 3/3
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) May 4, 2022