பாலியல் புகார் எதிரொலி …!மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது வழக்கு…!

Default Image

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக்கினார்.

இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய 11 பெண் பெண் பத்திரிகையாளர்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
இதில் குறிப்பாக பத்திரிக்கையாளர் பிரியா ரமணி என்பவர் ஆசிரியராக இருந்தபோது அக்பர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினார்.
Image result for journalist Priya Ramani

இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியது.

பின்னர் இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சி ரீதியாக விசாரிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறுகையில் அனைத்திற்கும் விடை விரைவில் கூறுகிறேன் என்று கூறினார்.அவர் கூறிய முதலே அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது இல்லம் முன்பு குவிந்து இருந்தார்கள்.இந்நிலையில் நேற்று  மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதில் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை,அடிப்படை ஆதாரமில்லாதவை.அதேபோல் என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Image result for journalist Priya Ramani
இந்நிலையில்  மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில்  பத்திரிக்கையாளர் பிரியா ரமணி  மீது அவதூறு மனு தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்