பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்.
ஏசியன் ஏஜ் உள்பட பல்வேறு பத்திரிகைகளில் முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பொறுப்புகளில் பணியாற்றியவர் எம்.ஜே.அக்பர். இவர் பத்திரிகை பணியை கைவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டார். தமது அமைச்சரவையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவரின் முகம் வேண்டும் என்பதால் எம்.ஜே.அக்பரை, பிரதமர் மோடி வெளியுறவுத்துறை இணை அமைச்சராக்கினார்.
இந்நிலையில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க பதிவாக கஜாலாவஹாப் என்ற பெண், மோடி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது புகார் கூறி, பதிவு செய்த பாலியல் வன்முறை சம்பவம் குறித்த விபரம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.கஜாலா வஹாப்பை தொடர்ந்து பல்வேறு தருணங்களில் அக்பருக்கு கீழ் பணியாற்றிய 16 பெண் பெண் பத்திரிகையாளர்கள், அக்பர் தங்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.
இதில் குறிப்பாக பத்திரிக்கையாளர் பிரியா ரமணி என்பவர் ஆசிரியராக இருந்தபோது அக்பர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் கூறினார்.
இந்தப் பிரச்சனை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் மிக முக்கிய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியது.
பின்னர் இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து கட்சி ரீதியாக விசாரிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஆனால் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கூறுகையில் அனைத்திற்கும் விடை விரைவில் கூறுகிறேன் என்று கூறினார்.அவர் கூறிய முதலே அனைத்து பத்திரிக்கையாளர்களும் அவரது இல்லம் முன்பு குவிந்து இருந்தார்கள்.இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பதில் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை,அடிப்படை ஆதாரமில்லாதவை.அதேபோல் என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (அக்டோபர் 15 ஆம் தேதி ) மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது அவதூறு மனு தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்.
இந்நிலையில் பாலியல் புகார் கூறிய நிலையில் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்.அதன்பின்னர் அவர் கூறுகையில்,என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றத்தின் மூலம் நிரூபிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள டோன்லட் டிரம்ப் வரும் 2025-ம் ஆண்டில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியிலிருந்த மருத்துவரை விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…
அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…