ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார்!
ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு.
ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சரும், இரண்டு முறை ஒலிம்பியனுமான சந்தீப் சிங் மீது ஜூனியர் தடகள பயிற்சியாளர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மறுத்துள்ளார்.