பாலியல் புகார் …!அவதூறு வழக்கு தொடர்ந்த பாஜக முன்னாள் அமைச்சர்…!அக்டோபர் 31ஆம் தேதி விசாரணை …!

Default Image

முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பரின் அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை ‘மீ டூ’ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த ‘மீ டூ’ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களை தெரிவித்தனர்.

அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வரும் சூழலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகளினால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என குறிப்பிடிருந்தார்.
Image result for akbar mj
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 17 ஆம் தேதி) மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.
ஆனால் அக்டோபர் 15 ஆம் தேதி  மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் பிரியா ரமணி மீது அவதூறு மனு தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.முன்னாள் அமைச்சர் எம்.ஜே.அக்பரின் அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.சாட்சி மற்றும் ஆதாரங்களையும் அக்டோபர் 31-ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பரும் 31-ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்