பாலியல் விவகாரம்; வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கு…டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!!
இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பாஜக கட்சியின் எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். ஆனால், பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யத் டெல்லி காவல்துறை தவறியது. இதனையடுத்து, டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், வழக்கு பதிவு செய்யாததால் கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுட்டனர். இதனையடுத்து, ஆனால், 3 மாதங்கள் ஆகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதால் தற்போது மீண்டும் போராட்டத்தை மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடங்கினார்கள்.
கடந்த ஜனவரி மாதம் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட், ரவி தஹியா மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள், போராட்டம் நடத்திவந்த நிலையில், WFI தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தவறான நடத்தை குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்படும் என உறுதியளித்த பின்னர் ஜந்தர் மந்தரில் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
மேலும், ஏற்கனவே, பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கக்கோரி, வினேஷ் போகத் தலைமையில் 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். மனுவில் காவல்துறை பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் மனு தொடர்ந்திருந்த நிலையில். இதற்கு பதிலளிக்க டெல்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தற்போது அனுப்பியுள்ளது. மேலும், இந்த வழக்கு விசாரணை வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.