ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து தங்கி பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து, கடந்த 10-ம் தேதி பெய்த மழையால் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில், சங்கோலி ராயண்ணா, ரயில்நிலையம் பின்புறமுள்ள பிளாட்பாரம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். நாலிரவில் அவர்கள் உறங்கி கொண்டு இருந்த போது, மர்ம நபர் ஒருவர் சிறுமியை தூக்கிக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவனை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலை, போலீசார் தேடுதல் வேட்டையில் சிக்கிய தினேஷ், உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…
சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…