இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைவு , ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு

Default Image

நாடு முழுவதும் பல மாநிலங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில்  மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி  2019-20 இன் முதல் கட்ட தரவுகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.முதல் கட்ட தரவுகள்படி பல மாநிலங்களில் (5 வயதிற்குட்பட்ட) குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு மிகவும் குறைவாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் எடை குறைதல் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெலுங்கானா, கேரளா,பீகார் மற்றும் அசாம் போன்ற பல மாநிலங்களும், ஜம்மு  போன்ற யூனியன் பிரதேசங்களிலும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது.  குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, அசாம் மற்றும் கேரளா போன்ற பல பெரிய மாநிலங்களில் குழந்தைகளின் எடை குறையும்  விகிதம் அதிகரித்துள்ளன.

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான பூர்ணிமா மேனன் கூறுகையில், நிலையான வளர்ச்சியடைந்த ஜனநாயக நாடுகளும் பொருளாதாரங்களும் முன்னேறும்போது குழந்தை வளர்ச்சியைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களும் மேம்படுகின்றன.குழந்தை இறப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை ஊட்டச்சத்து தான் காரணமாக உள்ளது என விளக்கப்பட்டுள்ளன தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்