பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், அவர்கள் 7பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. 2 மணி நேரமாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்தது. இதில், பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து தனி நபர்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அமைச்சரவையின் தற்போதைய தீர்மானம் மற்றும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.அதேபோல் வழக்கை விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்திவைத்தது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…