திரிபுரா ச.ம.உ.க்கள் பா.ஜ.க முதல்வருக்கு எதிராக போர்கொடி…
வடகிழக்கு மாநிலமான திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் ராஜினாமா செய்யக்கோரி, பாரதிய ஜனதா கட்சி ச.ம,உ க்கள் ஏழு பேர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில், முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான, பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. மொத்தம் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில், பா.ஜ.க வுக்கு, 35 உறுப்பினர்கள் உள்ளனர்.இந்நிலையில், பா.ஜ., – எம்.எல்.ஏ., சுதீப் ராய் பர்மன் தலைமையில், ஏழு பேர், டில்லியில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு வந்துள்ளனர். பா.ஜ., தலைவர் ஜே.பி., நட்டாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து, திரிபுரா மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் மாணிக் சஹா கூறியதாவது, டில்லி சென்றுள்ள ஏழு பேரும், என்னிடம் எந்த புகாரும் சொல்லவில்லை. அதனால், அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜ., அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. முதல்வர் பிப்லப் குமார் மீது, பிரதமர் மோடி, பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார்..