சேது சமுத்திர திட்டம்.. மதுரை எய்ம்ஸ்.. மணிப்பூர் வன்முறை… நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி.!
நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இன்று எதிர்கட்சியினர்களால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் மீது எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துக்களை, குற்றசாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். தற்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மக்களவையில் பேசினார்.
அவர் கூறுகையில் , பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகரித்துள்ளது. பாஜக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு தனிநபரின் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என கூறினீர்கள் அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போதெல்லாம் திருக்குறள் சொல்கிறார் . ஆனால், தமிழகத்திற்கு தேவையானதை செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ்க்கு பணம் ஜப்பானிலிருந்து வருகிறது என்கிறார்கள். இன்னும் மதுரை எய்ம்ஸ் கட்டடம் துவங்கிப்படவில்லை.
சேது சமுத்திர திட்டம் என்ன ஆனது.? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி – சோனியா காந்தி தொடங்கி வைத்த திட்டம் என்பதால் அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து குறைந்த விளக்கு குருடாயில் எனப்படும் பெட்ரோல் டீசல் மூல பொருள் எண்ணையை வாங்கி அதன் மூலம் விற்கப்படும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து காணப்படுகிறது.
மணிப்பூர் கலவரம் 3 மாதங்களாக தொடர்கிறது. அங்கு 143 மக்கள் இறந்துள்ளார். ஆயிரக்கணக்கனோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளள்னர். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவில்லை என திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.