தொடர் அமளி: மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு – வெங்கையா நாயுடு
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாளை காலை வரை ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு.
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலமையில் இன்று தொடங்கியது. அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மாநிலங்களவை வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் தொடர் அமளியில் எதிரிக்கட்சியினர் ஈடுபட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் தொடங்கப்பட்ட மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள், விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து விவாதிக்கவில்லை என கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கமிட்டு மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை நாளை காலை வரை ஒத்திவைத்து, அவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.