செப்டம்பர் 1ஆம் தேதி காவலர் தினம்.! மம்தா பேனர்ஜி அதிரடி.!
கொரோனா தடுப்பு களப்பணியில் முன்னின்று பணியாற்றும் காவலர்களை கௌரவப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதியை ஆண்டுதோறும் காவலர் தினமாக கொண்டாடப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு ஊரடங்கு பணியில் ஈடுப்பட்டு வந்து கொண்டிருக்கும் காவலர்களுக்கும் கொரோனா அதிகரித்து வருகிறது.
இது குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ‘ மேற்கு வங்கத்தில் இதுவரை 4000க்கும் அதிகமான போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு களப்பணியில் முன்னின்று பணியாற்றும் காவலர்களை கௌரவப்படுத்த செப்டம்பர் 1ஆம் தேதியை ஆண்டுதோறும் காவலர் தினமாக கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகையில், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 18 போலீசார் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி ஆணை வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது.’ என மம்தா பேனர்ஜி கூறினார்.