பரபரக்கும் ஜார்கண்ட் அரசியல் களம்.! ஆளும்கட்சி எம்எல்ஏக்களுக்கான தனி விமானம் ரத்து.!
ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து புதிய முதல்வராக பொறுப்பேற்க ஜார்கண்ட் மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் , தனது ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதத்துடன் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை கடந்த புதன் கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து நேற்று வரை எந்த பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதனை அடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் கட்சி தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தனி விமானத்தில் ஹைதிராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதல்வர்.! சம்பாய் சோரனுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்.!
ஆனால் நேற்று வானிலை சரி இல்லாத காரணத்தால், ராஞ்சியில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு விட்டதாக விமான நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஜார்கண்ட் மாநில அரசியலில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது .
இந்நிலையில் தான், நேற்று நள்ளிரவு சம்பாய் சோரனை ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று முதல்வராக பொறுபேற்க உள்ளார் சம்பாய் சோரன். மேலும் அடுத்த 10 நாட்களுக்குள் ஜார்கண்ட் சட்டப்பேரவையில் சம்பாய் சோரன் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் இது குறித்து கூறுகையில், எங்கள் கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் உள்ளனர் என கூறினார். மேலும், நாங்கள் 43 எம்எல்ஏக்களும் ஒன்றாக உள்ளோம். பெரும்பான்மையை நிரூபிப்போம் என எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
இதுகுறித்து கருத்து பதிவிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர் பிரியங்கா காந்தி, பீகாரில் கூட்டணி அரசு பதவி விலகிய உடனேயே, புதிய ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு அனுப்பினார். ஆனால் ஜார்க்கண்டில் உரிமை கோரி ஒரு நாள் ஆகியும் கூட ஆட்சி அமைக்க அழைப்பு அனுப்பப்படவில்லை. முதலில் அமலாக்கத்துறையை வைத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்தனர். பின்னர் சோரன் கைது செய்யப்பட்டார். இப்போது புதிய ஆட்சி அமைப்பதை நிறுத்தி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. முதலில் பீகார், பின்னர் சண்டிகர் மற்றும் இப்போது ஜார்கண்ட் – பாஜக பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் அரசை நசுக்குகிறது,