ஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அதில் மார்ச் 2-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இதுகுறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…