கேரளாவில் 5 வயது சிறுமி கொலை.. குற்றவாளிக்கு மரணதண்டனை..!

கேரளாவில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. கேரளாவின் கொச்சி மாவட்டம் ஆலுவா பகுதியில் புலம்பெயர் தொழிலாளியின் ஐந்து வயது சிறுமியை அசஃபக் அலாம் என்பவர் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி கடந்த ஜூலை மாதம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்தார்.

நாட்டையே உலுக்கிய இந்த சிறுமி கொலை வழக்கில் 26 நாட்களில் விசாரணை முடிக்கப்பட்டு 30 நாட்களில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த கொடூர சம்பவம் நடந்த 110-வது நாளில் குற்றவாளிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்