கேரள பழங்குடியினரைக் கொன்ற வழக்கில் 13 குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு, காடுகளில் தனிமையில் வாழ்ந்து வந்த மனநோயால் பாதிக்கப்பட்ட மது என்பவர் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பொருட்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு அடையாளம் தெரியாத கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணையின் போது 100-க்கும் மேற்பட்ட சாட்சிகளில் 24 பேர் விரோதமாக மாறியதன் மூலம் இந்த வழக்கு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.
தற்பொழுது, இந்த வழக்கு விசாரணை மாநில சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கேரள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருவர் ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். மேலும் வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததாக 10 சாட்சிகள் மீது வழக்கு தொடரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் விதிக்கப்பட்ட தண்டனைகள் போதுமானதாக இல்லை என்றும் அவர்கள் ஆயுள் தண்டனை பெற தகுதியானவர்கள் என்றும் கூறினார். குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து மதுவின் குடும்பத்தினரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இருவரை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மதுவின் தாய் கூறினார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கும் தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், அதில் 75 சதவீதத்தை மதுவின் குடும்பத்தினருக்கும், அந்த தொகையில் 50 சதவீதம் மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என்று கூறியது. மேலும், இந்த வழக்கில் குற்றவாளியான ஒருவர் தாக்கியதாக மட்டுமே குற்றம் சாட்டப்பட்டதால் அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…