Janagama [File Image]
தெலுங்கானா : ஜனகாம – பசரமட்லா கிராமத்தைச் சேர்ந்த நிம்மல நரசிங்கராவ் என்ற விவசாயி தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருந்தும் இறந்தது போல் தங்கள் நிலம் மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக வேதனை தெரிவித்த நிம்மல நரசிங்கராவ் வேகமாக கையில் ஒரு பூச்சி மருந்து பாட்டிலுடன் ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி குடித்து கொண்டு இருந்தார். கீழே இருந்த அதிகாரிகள் மற்றும் மக்கள் சிலர் கீழே இறங்குங்கள்…கீழே இறங்குங்கள் என்பது போல கூறினார்கள்.
ஆனால், நிம்மல நரசிங்கராவ் கேட்காமல் கையில் வைத்து இருந்த பூச்சி மருந்தை குடித்தார். இந்த சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மேலே சென்று நிம்மல நரசிங்கராவை பிடித்து கீழே கொண்டு சென்றார்கள்.
பின் பூச்சி மருந்தை அவர் அதிகமாக குடித்த காரணத்தால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று போலீசார் காரில் ஏற்றி சிகிச்சைக்கு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்க முயற்சி செய்தார்கள். ஆனால், தன்னுடைய நிலம் போன விஷயத்தில் நொந்து போன நிம்மல நரசிங்கராவ் காரில் எற மறுத்துள்ளார்.
பிறகு காவலர்கள் அவரை பிடித்து காருக்குள் தூக்கி வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது . தனது நிலத்தை மற்றவர்களுக்கு வழங்கியதாக கூறி ஆட்சியர் கட்டிடத்தில் ஏறி விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…