திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!
மேற்கு வங்க மாநிலத்தில் பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த போதிலும், தனது கணவர் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி ஜோத்ஸ்னா ஆதியா குற்றசாட்டியுள்ளார். மேற்கு வங்கம் மாநிலத்தில் பொது விநியோக திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறையினருக்கு வந்துள்ளன.
மாநிலங்களவை வேட்பாளராக ஸ்வாதி மாலிவால் நியமனம்..!
இதுதொடர்பாக சோதனை நடத்த வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டிற்குச் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காரில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவப்படை வீரர்கள் என பலரும் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து, பொது விநியோக திட்ட முறைகேடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
சங்கர் ஆதியாவை கைது செய்து அழைத்துச் சென்றதையடுத்து, அப்பகுதி மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்த நிலையிலும், அதிகாரிகள் தனது கணவரை கைது செய்ததாக சங்கர் ஆத்யாவின் மனைவி தெரிவித்திருக்கிறார்.