மூத்த அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுகின்றனர் : பெண் ஐஏஎஸ் அதிகாரி புகார் ..!
அரியானா மாநிலத்தை சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தன்னை மூத்த அதிகாரி கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
இது குறித்து அந்த பெண் அதிகாரி தனது பேஸ் புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
மூத்த அதிகாரி இரவு 7 அல்லது 8 மணி வரை தாமதப்படுத்துவார். தேவையற்ற வேலைகளை சொல்வார். வேலை குறித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்வதாகவும் அவ்வாறு எதிர்மறை கருத்துக்களை பதிவு செய்தால் உன் எதிர்காலம் பாதிக்கப்படும் என அச்சுறுத்தினார்.
மே 22 ம் தேதி அவர் என்னை முதலில் தனது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார், என் வழிகளை மாற்றிக்கொள்ளும்படி என்னிடம் சொன்னார். வாழ்க்கை முழுவதும் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.
உன் மீது புகார் கூறி வேறுதுறைக்கோ அல்லாது வேறு இடத்திற்கோ மாற்றி விட முடியும் என கூறினார். என பேஸ் புக்கில் கூறி உள்ளார்