கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் வாட்ஸ் அப்பில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆபாச வார்த்தைகள் அடங்கிய தகவலை அனுப்பியுள்ளார்.
இதில் பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுள் ஒருவர் இதன் காரணமாக தலைமை செயலாளர் டோம் ஜோசிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கையெடுப்பதாக கூறியுள்ளார்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளிக்கப்போவதாக கூறியுள்ளார்.இதன் அடிப்படைடையில் தலைமை செயலாளர் அந்த மூத்த அதிகாரியை அழைத்து விசாரித்துள்ளார்.
இந்நிலையில் முதலில் நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறிய அவர் ,அந்த பெண் அதிகாரி கொடுத்த ஆதாரங்களை காட்டியதும் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.அந்த பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்குமாறு செயலாளர் கூறியுள்ளார்.
பின்னர் அந்த மூத்த அதிகாரி அந்த பெண் அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டதும் முதல்வரை சந்திக்காமல் விட்டுள்ளார்.ஆனால் இந்த தகவல் முதல்வர் பினராயி விஜயனுக்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக முதல்வர் அந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியை முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கியுள்ளார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…