ஊழல் புகாரின் பேரில் NIA மூத்த அதிகாரி சஸ்பெண்ட்!
ஊழல் புகாரின் பேரில் என்ஐஏ மூத்த அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதன் மூத்த அதிகாரி ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. என்ஐஏ மூத்த அதிகாரி எஸ்பி விஷால் கர்க் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் பேரில், இயக்குநர் ஜெனரல் தினகர் குப்தாவின் உத்தரவின்படி, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-ஆம் ஆண்டில், ஒரு தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக கார்க் இடைநீக்கம் செய்யப்பட்டார்.