முதுநிலை மருத்துவ கலந்தாய்வு – மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.!
மத்திய அரசின் பதிலை ஏற்று தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நீடிக்க கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த மாதம் ஆகஸ்ட் 31ல் கலந்தாய்வு முடிந்த நிலையில், மேலும் 15 நாட்களுக்கு நீடிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. முதுநிலை மருத்துவ கலந்தாய்வை ஒருநாள் கூட நீடிக்க கூடாது என மத்திய அரசு கூறியதை ஏற்று உட்சநீமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.