மூத்த தலைவர்கள் எதிர்ப்பு.., காங்கிரஸில் சேர்வாரா பிரசாந்த் கிஷோர்? – சோனியா காந்தி விரைவில் முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தலைவர் சோனியா காந்தி விரைவில் முடிவு.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐ-பேக் என்ற நிறுவனத்தின் மூலமாக பல்வேறு அரசியல்  கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்கள் வகுத்து கொடுத்து வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் பணியாற்றினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சிக்கு பணியாற்றி வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால், நாடு முழுவதும் இவரது புகழ் பரவ தொடங்கியது. ஆனால், கடந்த உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டசபைத் தேர்தலின் போது பிரசாந்த் கிசோர், காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வியூகங்கள் வகுத்துக் கொடுத்தும், அங்கு அந்தக் கட்சி தோல்வியை சந்தித்தது.

இதனிடையே, ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய பிரசாந்த் கிஷோர், இதன் பிறகு வேறு எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார். ஆனால், தற்போது காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை நடத்தி உள்ளார்.

மிஷன் 2024 என்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள வலுவான ஒரு எதிரணியை உருவாக்க வேண்டும் என்று ஒருபக்கம், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓன்றிணைந்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து மத்திய பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமல்லாமல், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஆலோசனைகள் நடத்தி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது.

இந்த நிலையில், வியூக நிபுணர் பிரசாந்த் கிசோர் காங்கிரஸ் இணைவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்றவர்கள் பிரசாந்த் கிஷோரை, காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்கு எந்த தடையும் தெரிவிக்காத நிலையில், முக்கிய தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பது போல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூத்த தலைவர் அகமது பட்டேல் இருந்த வரையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டார். அவரது மறைவுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்புவதற்கு சோனியா காந்தி முயற்சி செய்து வருகிறார்.

இந்த முறை சரியான நபரை, அந்த இடத்தில் அமர வைத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளார். ஏனென்றால், நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸ் சரியான வியூகங்கள் வகுக்காததால் தோல்வியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற கட்டாய சூழலில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்றும் அவர் தான் சரியாக இருப்பார் எனவும் சோனியா காந்தியின் எண்ணமாக உள்ளது.

கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு, கட்சியை முழுவதுமாக மாற்றியமைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழு G-23, பிரசாந்த் கிஷோர் கட்சியில் சேருவதற்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. அவர்கள் சமீபத்தில் கபில் சிபலின் இல்லத்தில் சந்தித்து பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது பற்றி விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸில் பிராசாந்த் கிஷோர் வருவதை சோனியா காந்திக்குக் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்த ஜி-23 மூத்த தலைவர்கள் பலர் இதை விரும்பவில்லை. கட்சிக்கு  உழைக்காமல் சுலபமாக வருவதாகவும், அவர் கட்சிக்குள் வந்தாலும் தேர்தல் வெற்றியில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்படாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரை சேர்ப்பது குறித்து தலைவர் சோனியா காந்தி விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

இளையராஜாவை பற்றி பேச அருகதை கிடையாது! மிஷ்கினை வெளுத்து வாங்கிய விஷால்!

சென்னை : பாட்டில் ராதா என்கிற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து…

4 minutes ago

Live : ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணித்த கட்சிகள் முதல்..தமிழக அரசியல் நகர்வுகள் வரை!

சென்னை : 76-வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, தேமுதிக…

35 minutes ago

இதயமாற்று அறுவை சிகிச்சை துறையின் ‘BIG DADDY’! யார் இந்த மருத்துவர் கே.எம்.செரியன்?

சென்னை : மருத்துவர் செரியன் (Dr. Cherian) காலமானார் என்ற செய்தி தமிழ்நாட்டில் மற்றும் மருத்துவ சமுதாயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

41 minutes ago

INDvENG : தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? 3-வது போட்டியில் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்!

குஜராத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டி20 போட்டிகள் மூன்று ஒரு நாள் போட்டிகள்…

2 hours ago

தமிழக மீனவர்கள் கைது : மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று…

2 hours ago

“உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரப்போகிறோம்” அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

உக்ரைன்-ரஷ்யா போர் என்பது 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தொடங்கியது. இன்னும் இந்த போர்…

3 hours ago