மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் மரணம்..!
போபால் விஷவாயு சம்பவம் குறித்து முன்பே எச்சரித்த மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி கொரோனாவால் உயிரிழந்தார்.
ராஜ்குமார் கேஸ்வானி நியூயார்க் டைம்ஸ், என்.டி.டி.வி., டைனிக் பாஸ்கர், தி இல்லஸ்ட்ராடெட் வீக்லி ஆப் இந்தியா, ஞாயிறு, இந்தியா டுடே மற்றும் தி வீக் போன்ற முக்கிய பத்திரிகை நிறுவனங்களுடன் பணியாற்றியுள்ளார். உலகின் மிக மோசமான போபால் விஷவாயு கசிவு 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 ஆம் தேதிகளில் இரவில் நடந்தது. ஆனால், இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜ்குமார் கேஸ்வானி எச்சரித்திருந்தார். இதில் பல பேர் உயிரிழந்தனர்.
தற்போது, ராஜ்குமாரின் மகன் ராணக் வெள்ளிக்கிழமை அன்று கேஸ்வானி கொரோனாவால் இறந்ததாக தெரிவித்தார். 72 வயதான கேஸ்வானி கொரோனாத் தொற்றால் ஏப்ரல் 8ஆம் தேதி பாதிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் ஏப்ரல் 20 ஆம் தேதி குணமடைந்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் கடைசி வாரத்தில் இவர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில், இவர் கொரோனா பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இறந்துள்ளார்.
இதற்கு மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது இரங்கலை தெரிவித்தார். அதில் அவர், “போபால் எரிவாயு சம்பவத்திற்கு முன்னரே அதன் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி கவனிக்க வேண்டும் என்பதை குறித்து கேஸ்வானி திறம்பட செயல்பட்டார்” என்று கூறியுள்ளார்.
மேலும், மூத்த பத்திரிக்கையாளர் தீபக் திவாரி, “டிசம்பர் 2-3, 1984 யில் நடந்த போபால் எரிவாயு சம்பவம் குறித்து ராஜ்குமார் கேஸ்வானி முன்பே எச்சரித்தார்” என்று தெரிவித்துள்ளார்.