மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் உயிரிழந்துள்ள நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமாகிய ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார். கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்கள், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் பொழுது, தலையில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று மதியம் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ராஜ்யசபா எம்பி ஆஸ்கர் பெர்னாண்டஸ் அவர்களின் மறைவு தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்காக தான் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…